Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

பால்குடம் எடுத்தல்

17/07/2026 • • Admin • 151 views
post image

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்குத் தெரு காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு பால்குட விழா நடைபெற்றது.காலை 9 மணியளவில் திருக்குளத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.பின்னர் நான்கு வீதிகளிலும் பக்தி பவனியுடன் வீதி உலா நடைபெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.உள்ளூர் நாட்டாமைகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.பலர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால்குடம் எடுத்தனர்.விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.